கோவை சேலம் பாசஞ்சர் ரயில் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

Spread the love

கோவை சேலம் பாசஞ்சர் ரயில் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

 

 

கோவை டிசம்பர் 1-

 

 

கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

 

இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் வாஞ்சிபாளையம், திருப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக இயக்கப்படும் ரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

அதன்படி ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9 மணிக்கு புறப்படும். இதனையடுத்து எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 11:40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மேட்டுப்பாளையம் சாலையில் மாடுகளை பராமரிப்பு இன்றி உலவ விட்ட மாட்டு உரிமையாளருக்கு 15,000 அபராதம்.
Next post கோரிக்கையை அரசு ஏற்கும் வரை மின் கட்டணம் செலுத்தாமல் போராடுவோம் திருப்பூர் கோவை விசைத்தறியாளர்கள் உறுதி.