குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சார்பில் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் கலந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படடுத்தியது
மோதல் தொடர்பாக பல மாணவர்களின் மீது குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்
இந்நிலையில் மாணவர்களிடையே அடிக்கடி ஏற்பட்டு வரும் மோதல் சம்பவங்களை குறைக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் தலைமையிலான காவலர்கள் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்
இதுபோன்று செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் மேல் படிப்புகளிலும் வாழ்க்கையிலும் அவர்கள் மீது பதியப்படும் வழக்கினால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்
குறிஞ்சிப்பாடி காவல் துறையினரின் புதிய முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது