கோவையில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் சிறப்பு விருந்தினராக ஆர்.கே.குமார் பங்கேற்பு
கோவையில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் சிறப்பு விருந்தினராக ஆர்.கே.குமார் பங்கேற்பு
கோவை டிச 6,
கோவை அவிநாசி சாலை பந்தய சாலையில் உள்ள மூத்த வழக்கறிஞர், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக மாநில தலைவர் சுந்திர வடிவேலு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான சட்டத்தை பற்றி பயிலரங்கம் நடந்தது. இந்த நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அதன் விபரம் வருமாறு
கோவையில் சட்ட கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சட்டத்தை பற்றிய பயிரங்கம் மூத்த வழக்கறிஞரும்,அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவருமான சுந்திர வடிவேல் அலுவலகத்தில் சட்ட பயிற்சியாளர்களின் பயிற்சி அமர்வு ஆலோசகர் வழக்கறிஞர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.இதில் சட்டக்கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.