ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோழி கழிவுகளை கொட்டும் வாகனத்தை பிடித்துக் கொடுத்தால் 1000 பரிசு கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு.

Spread the love

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோழி கழிவுகளை கொட்டும் வாகனத்தை பிடித்துக் கொடுத்தால் 1000 பரிசு கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு.

கோவை அக்டோபர் 3-

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர். ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு,
Next post திமுக மாவட்ட செயலாளருக்கும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்