ஊருக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு காதலனை கரம் பிடித்த நர்சு.

Spread the love

ஊருக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு காதலனை கரம் பிடித்த நர்சு.

கோவை அக்டோபர் 5-

சிவகங்கை மாவட்டம் காளையாறு கோவிலை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நர்சாக வேலைபார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை.எனவே ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், இளம் பெண்ணின் தந்தை தனது மகளின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசை பார்த்தார். அப்போது தனது மகள் திருமண கோலத்தில் ஒரு வாலிபருடன் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தனது மகள் வேலைபார்க்கும் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு தனது மகள் குறித்து கேட்டார்.

அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், உங்கள் மகள் விடுமுறையில் சென்று 3 மாதங்கள் ஆகிவிட்டது என கூறிவிட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் தந்தை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர் தனது மகளின் தோழிகளிடம் விசாரித்தார். அப்போது இளம் பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததும், வீட்டிற்கு தெரிந்தால் எதிர்ப்பு வரும் என்பதால் தனது காதலனுடன் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து இளம் பெண்ணின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து அதனை செல்போனில் பதிவேற்றம் செய்த நர்ஸை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா?வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி?
Next post கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மகிஷாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி