எம்.பில். பிஎச்.டி,க்கு 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Spread the love

கோவை அக்டோபர் 3-

எம். பில்” பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்க 15-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை, பாரதியார் பல்கலை நீட்டித்துள்ளது.பாரதியார் பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லுாரிகளில் உள்ள, 37 பாடப்பிரிவுகளில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதி, அதில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.மாணவர்கள் பல்கலையின், www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும் 15 வரை பல்கலை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் 15 ஆயிரம் பேர் கண்டு களித்தனர்.
Next post சாலையில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள். தனியார் விற்பனை பிரதிநிதி உட்பட 4 பேர் கைது.