எம். பி. ஏ. படிப்பில் சேர வரும் 10 -ம் தேதி கவுன்சிலிங்

Spread the love

எம். பி. ஏ. படிப்பில் சேர வரும் 10 -ம் தேதி கவுன்சிலிங்

கோவை அக்டோபர் 4-

கோவை:எம்.பி.ஏ., படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும், 10ம் தேதி பாரதியார் பல்கலையில் சிறப்பு கவுன்சிலிங் நடக்கிறது.பாரதியார் பல்கலையின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பள்ளி சார்பில், எம்.பி.ஏ.,(சுய சார்பு) படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

டான்செட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்தது. இந்நிலையில், எம்.பி.ஏ., படிப்பில் ஒரு சில இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

இவற்றை நிரப்ப, வரும், 10ம் தேதி காலை, 10:30 மணிக்கு பல்கலையின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பள்ளியில், கவுன்சிலிங் நடக்க உள்ளது.

மதியம், 12:00 மணிக்கு மேல் வருவோர் கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாது. மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ்,2, டி.சி., சாதிச்சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், இளங்கலை மதிப்பெண் சான்றிதழ்,

பட்டம், டான்செட் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டு, மருத்துவ தகுதிச்சான்றிதழ், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்களுடன் வர வேண்டும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழக முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 50 கோடி சொத்து படங்கள் முடக்கம் தமிழக காவல்துறை தகவல்
Next post சிறுவாணியில் 55 மில்லி மீட்டர் மழை