காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.

Spread the love

காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.

கோவை அக்டோபர் 3-
காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை. ஒருவர் படுகாயம்.
Next post கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனு,