கோவைக்கு ரூ.2.94 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது

Spread the love

கோவை:

கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர். அதில் 2 பயணிகள் உள்ளாடைகள், பாக்கெட்கள், பேன்ட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது.

இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும் தங்கம் கடத்தலில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள இடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Next post விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது