கோவையில் நடைபெற்ற மெகா ஆடை அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது…

Spread the love

உலக சாதனை முயற்சியாக ஐம்பது ஆடை வடிமைப்பாளர்கள் உருவாக்கிய 300 ஆடைகள் அணிந்து கோவையில் நடைபெற்ற மெகா ஆடை அலங்கார அணிவகுப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது…

கோவையை சேர்ந்த பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்று வரும் இல்லத்தரசிகள் தாங்களே டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்களது குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணி வகுப்பை நடத்தி அசத்தியுள்ளனர்.இந்த அணி வகுப்பை உலக சாதனை முயற்சியாக மூன்று மணி நேரத்தில் 300 ஆடைகளை சுமார் எழுபது மாடல்களை கொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது.இதற்கான துவக்க நிகழ்ச்சி பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மால் வணிக வளாகத்தில் நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக,பிரபல பெண் பத்திரக்கையாளர் வாசுகி ராஜா,சர்வதேச ஜூனியர் மாடல் ராணா சிவக்குமார்,யு.ஆர்.எஃப் சாதனை புத்தகத்தின் ஜூரி சுனில் ஜோசப்,தீர்ப்பாளர் சியா ஸ்ரீ,பிரபல நடிகர் மேக்கப் கலைஞர் சத்யா,பிரபல மாடல் மணிகண்டன்,மருத்தூவரும் திருமதி கோயமுத்தூர் காயத்ரி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சாதனை நிகழ்ச்சியில்,கூடுதல் சிறப்பாக சாதாரண இல்லத்தரசிகள் வடிவமைத்த ஆடைகளை அவர்களது குழந்தைகளே அணிந்து வந்து ஒய்யார நடை நடந்து அசத்தினர்…இவர்களது இந்த சாதனை யூ.ஆர்.எஃப் .உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று (ஐ.எஸ்.ஓ) பெற்றது
Next post சோழர்கால சிற்பங்கள்,ஓவியங்களை கண்முன் நிறுத்தும் விதமாக பொள்ளாச்சி தனிஷ்க் ஜுவல்லரியில் அறிமுகம்