கோவை குனியமுத்தூரில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் புதிய கிளை துவக்கம்

Spread the love

கோவை குனியமுத்தூரில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் புதிய கிளை துவக்கம்
புதிய கிளையை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையின் பெருமையாக திகழ்ந்துவரும் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களின் 19வது புதிய கிளை தற்போது குனியமுத்தூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு துவக்கப்பட்டது. இந்த புதிய கிளையை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன் குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். குனியமுத்தூர் கிளையின் முதல் விற்பனையை நந்தகுமார் துவக்கி வைக்க, அதை நிசா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாஜி அப்துல் ஜாபர் பெற்றுக்கொண்டார்.

சுமார் 13,500 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட இந்த புதிய கிளையில் 210 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய டைனிங் ஹால், மேலும் சுப நிகழ்ச்சிகள் நடத்த, 250 பேர் பங்கு எடுக்கக்கூடிய, ஏ.சி. வசதிகள் கொண்ட பிரம்மாண்ட அனுகிரஹா பார்ட்டி ஹால், 100 கார்களை நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 190 இனிப்பு வகைகள், 60 வகை கார வகைகள் மற்றும் கேக் வகைகளுக்கான பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. டைனிங் ஹாலை சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி இணையத்துல்லா துவக்கி வைத்தார். அனுகிரஹா பார்ட்டி ஹாலை ஜி.ஆர்.ஜி. குழுமங்களின் தலைவர் ரங்கசாமி நாயுடு துவக்கி வைத்தார்.

இந்த துவக்க விழாவில் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் தலைவர் கே.ராமசாமி, துணை தலைவர் டி.சுந்தரராஜன், நிர்வாக இயக்குனர் டி. ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் ஆர்.வெங்கடேஷ் மற்றும் செயல் இயக்குனர்கள் ஜெகன் எஸ். தாமோதரசாமி, கார்த்திகேயன், விவேக் ஸ்ரீனிவாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மனிதத்தை போற்றியும் SIOவின் 40 வருட சாதனையை பயணத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
Next post வேலூர் மாவட்டத்தில் சாராயத் தொழில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எஸ் பி எச்சரிக்கை!