கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில் உள்ள, விளையாட்டு மைதானத்தில் இன்று, முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 11 வயது மாணவி, மூன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்,

Spread the love

கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில் உள்ள, விளையாட்டு மைதானத்தில் இன்று, முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 11 வயது மாணவி, மூன்று உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்,

கோவை சின்னவேடம் பட்டி பகுதியை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியரான,
பாபு, கிருத்திகா தம்பதியினரின், மூத்த மகள் 11 வது வயதான தீர்த்தாபாபு, இவருக்கு சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலைகளில் அதீத ஈடுபாடு காரணமாக, சின்னவேடம்பட்டி பகுதியில், பயிற்சி அளித்து வருகின்ற முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர், சிலம்ப பயிற்சிகளுக்காக சேர்ந்து விட்டுள்ளனர், சிலம்ப பயிற்சிகளை முறையாக கற்று கொண்ட பின்னர், தான் கற்ற கலைகளை, சாதனையாக மாற்றும் முயற்சியில் கடந்த ஒரு மாதமாக, ஈடுபட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து கடந்த 16 நாட்களாக பல்வேறு கட்ட பயிற்சிகளை பயிற்சியாளர்கள், அளித்ததன் அடிப்படையில் இன்று, சின்னவேடம்பட்டி பகுதியில், ஒரு கைகளில் சிலம்பம் சுற்றியபடி மூன்று மணி நேரம் இலக்காக, நிர்ணயம் செய்யபட்ட 17 கிமி தூரத்தை பின்னால் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றி வர வேண்டும், என்ற போட்டியில்,
2மணி நேரம் 59 நிமிடம் 59 விநாடிகளில் செய்து முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார், இந்திய நாட்டில், இதுவரை யாரும் இது போன்ற முயற்சியை, முயற்சிக்காத நிலையில், அதனை செய்து, வெற்றியும் கண்டு சிலம்ப துறையில், தீர்த்தாபாபு, புதிய தடம் பதித்துள்ளார்,
இதனை,நேரடியாக ஆய்வு செய்த இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், அமேரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், மற்றும் யூரேப்பியன் புக் ஆப் வேல்ர்ட் ரெக்கார்ட்ஸ், என மூன்று சாதனை அமைப்புகள் இந்த சாதனையை அங்கீகரித்து, தீர்த்தா பாபுவுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கேடயங்கள், மற்றும் ஆளுயர கோப்பையை மைதானத்தில் இன்று, வழங்கி பெருமை படுத்தியது,
இந்த நிகழ்ச்சியில், இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ், இந்தியா புக் ரெக்கார்ட்ஸ் தலைவர்,
சதாம் உசேன், நடுவர்கள் பாலாஜி, என பலரும் கலந்து கொண்டு, உலக சாதனையை, வழி நடத்தி சாதனையை அங்கீகரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சாதனையை படைத்த மாணவிக்கு சக மாணவ, மாணவிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் சார்பாக யாதுமாகி நிற்பவள் இரண்டாவது சீசன் விழா நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. …
Next post தெலுங்கானா மற்றும் தமிழக மாநிலங்களை தொழில் மேம்பாட்டில் இணைக்க கோவையை சேர்ந்த இளைஞரின் புதிய முயற்சி…