தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா மேற்பனைக்காட்டில் பேட்டி.
புதுக்கோட்டை அருகே ஒரு உயிர் பறிபோகும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது பாஜக மா நில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா மேற்பனைக்காட்டில் பேட்டி.
புதுக்கோட்டை அக்.5.
சாதாரணக் ஒரு குடிமைப் பிரச்சினையை ஒரு உயிர் பறிபோகும் அளவிற்குக் கொண்டு சென்றிருப்பது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது.
கோகிலாவின் மரணத்தில் சம்மந்தப்பட்ட காவல்துறையினரை கு றைந்தபட்சமாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அதுதான் நீதி எனவும், பணியிட மாற்றம் என்பது ஒரு தண்டனையே இல்லை –
பாஜக . மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா மேற்பனைக் காட்டில் பேட்டி.
போலிசார் பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி பெண் தற்கொ லை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த பெண்ணின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்க ளிடம் பேச்சு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்கா ட்டில் பெண் ஒருவர் பொய்| வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி தற் கொலை செய்து கொண்ட பெண் கோகிலாவின் உடல் நேற்று பல கட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா நேற்று மேற்பனைக்காட்டில் அறந்த கோகி லாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அத்தோடு இந்த சம்பவம் குறித்து முழுமையாக கோகிலாவின்’ குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தகவர்களைக் கேட்டறிந் தார்.அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சிவா கூறிய தாவது,
மேற்பனைக்காட்டில் நடந்தேறி இருப்பது மிகத் துயரமான சம்பவம், தொலைக்காட்சிகளில் பார்த்ததை விட நேரில் வந்து பார்ப்பது மிக வும் நெஞ்சை உளுக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த சம்பவத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதியிடன் இருப்பதால் தான் அவர் வெளிநாட்டில் இருந்த போதிலும் எங்களை இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் உட ன் நிற்கச்சொல்லி இருக்கிறார்.
சாதாரண ஒரு குடிமைப் பிரச்சனையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தது ஒரு தவறான செயல், கமிஷனுக்காக திமுகவை சேர்ந்த எம். எம். குமார் என்பவர் காசை வாங்கிக்கொண்டு இந்த பிரச்சினையில் தலையிட்டால் காசு கிடைக்கும் என்பதற்காக ஒரு உயிரை பலி வாங்கியுள்ளார்.
அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் இறந்த பெ ண் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இறந்தபோதும், ஆதாரங்கள் பல இருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
கோகிலாவின் தாலியை கழட்டி அவமானப்படுத்திய காரணத்திற் காக அவரின் உயிர் பறிபோயுள்ளது. நீதிபதி அவரது சொந்த ஜாமீ னில் விடுவித்த போதும் கையெழுத்திட சென்ற போது அவரை புண் படுத்தும் விதத்தில் பேசியதில், மன உளைச்சலில் இருந்து உயிரை விட்டுள்ளார்.
இவ்வளவு நடந்த பிறகும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்த பிறகும் அவர்களை குறைந்தப ட்சமாக பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்களை பணியிடமாற்றம் செய்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது. இதுவரை தி முகப் பிரமுகர் எம். எம். குமார் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யவி ல்லை.
தற்கொலைக்கு தூண்டுதல், கொலைக்கு காரணம் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்து றைக்கு தங்களது கோரிக்கை சம்மந்தப்பட்ட காவல்துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
கோகிலாவை மிகவும் சிரமப் படுத்தியவர்கள் தற்கொலைக்கு தூ ண்டிய காரணத்திற்காக குறைந்தபட்சம் அவர்களை பணியிடை நீக்கம் செய்தாக வேண்டும். திமுக பிரமுகர் எம் எம் குமார் மீது உட னடியாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.
உடனடியாக அரசும் காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவி ல்லை என்றால் பாஜகவின் சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் பிரச்சினையில் பாஜக கையில் வைத்து உரிய நீதி கிடைக்க அவர்களின் குடும்பத்தினருடன் பாஜக நிற்கும்.
பாஜக முழுமையாக நீதியைப் பெற்றுத் தரும்.இறந்தவரின் குழந் தைகளின் படிப்புச் செலவை முழுமையாக பாஜக இளைஞரணி ஏற்றுக்கொள்ளும். அதற்கு மேற்பட்ட உதவிகளை பாஜக செய்து கொடுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தோடு என்றும் பாஜக உடன் நிற்கும்.சாதாரண ஒரு குடிமைப் பிரச்சினையை இந்த அள விற்குப் போக விட்டது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது.
இவ்வாறு பாஜக மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா பேசினார்.