தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு.

Spread the love

தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு.
கோவை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதிய உயர்வை வழங்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்-பிடம் தமிழக அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள் நல சங்கத்தினர் மனு வழங்கினர். இந்த மனுவில் கடந்த ஆண்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை விட இந்த ஆண்டு கூடுதலாக போனஸ் தொகையை உயர்த்தி வழங்கி வேண்டும் எனவும் அதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.721/- தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் காப்பீடு பி.எப் இ.எஸ் ஜ முறை படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் ஜனசக்தி லேபர் யூனியன் தலைவர் பழனிசாமி கூறும் போது ஒரு சில சங்கங்கள் ஒருங்கிணைத்து தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தற்போது கோவை மாவட்டத்தில் நடந்து வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தொழிலாளர்கள் நலன் கருதியும்,சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் நாங்கள் எந்தவித ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பங்கேற்கவில்லை என கூறினார். மேலும் தொழிலாளர்கள் நலன் கருதி தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தி கூறினார். மேலும் இதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் முன்னேற்றச் சங்கம் தலைவர் முருகேசன், ஆதித்தமிழர் பேரவை பொது செயலாளர் கோவை ரவிக்குமார், கம்யூனிஸ்ட் கட்சி ரத்தனக்குமார்,ஜனசக்தி லேபர்ஸ் யூனியன் தலைவர் பழனிசாமி,தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் உரிமைகள் கழகம் தலைவர் மருதாசலம், அருந்ததியர் முன்னேற்ற சங்கத்தலைவர் மணியரசு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கோவை ரோஷன் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆவினங்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம்
Next post இலக்கியபட்டி ஊராட்சி கிராம சபைகூட்டம் நடைபெற்றது