நாளை ஆயுத பூஜை விழா கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

Spread the love

நாளை ஆயுத பூஜை விழா கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

கோவை அக்டோபர் 3-
நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டா– டப்படுகிறது. இதனை–யொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவார்கள்.
இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு தேவையான பொருட்களை கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர்.நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மக்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான எலுமிச்சம் பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைகுலை, தேங்காய் மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது. கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிேலாவில் வருமாறு:-

மல்லிகைப்பூ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.360, அரளி ரூ.350, தாமரை பூ ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.350, செண்டுமல்லி ரூ.80, வாடாமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.

இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ.20க்கும், மாலை இலை 1 கட் ரூ.20க்கும் விற்பனையானது. சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.

இதேபோன்று கோவையில் உள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

இதன் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post இலக்கியபட்டி ஊராட்சி கிராம சபைகூட்டம் நடைபெற்றது
Next post மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை. ஒருவர் படுகாயம்.