பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் வேலூர் இப்ராஹிம் பேச்சு,

Spread the love

பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் வேலூர் இப்ராஹிம் பேச்சு,

கோவை அக்டோபர் 5-

வால்பாறையில் உள்ள பா.ஜ.க. மண்டல அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலூர் இப்ராகீம் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் வால்பாறையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் தி.மு.க. அரசு வால்பாறை மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

சுற்றுலாபயணிகள் அதிகம் வந்து செல்லும் வால்பாறையில் அடிப்படை வசதிகள் இல்லை. மக்களை பழிவாங்கும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும்.

ஜனநாயக அடிப்படை யில் நடைபெறும் போராட்ட ங்களை தடை செய்வதும், பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்வதும், அடக்குமுறையை கையாள்வதும் தி.மு.க. ஆட்சியில் தொடர்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது மத்திய அரசின் சாதனைகளை ஏைழ, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பா.ஜ.க. நிர்வாகிகள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.
Next post கோவையில் ரயில் மோதி அடையாளம் தெரியாத ரெண்டு பேர் பலி.