புகையிலை தடுப்பு பொது இடங்களில் புகைபிடித்தல் அபராத வசூலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்.
புகையிலை தடுப்பு பொது இடங்களில் புகைபிடித்தல் அபராத வசூலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்.
கோவை அக்டோபர் 5-
தமிழகத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம் வசூல் செய்தல் போன்ற பணிகளில், கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது,” என, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள், வட்ட சுகாதார மேற்பார்வையாளர்கள் உதவியுடன், புகையிலை தடுப்பு சட்ட விதிமீறலில் ஈடுப்படும் நபர்களிடம், அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள்,
பள்ளி மற்றும் கல்லுாரிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 100 ‘யார்ட்’ தொலைவில் உள்ள கடைகளிலும், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் கடந்த ஏப்., மாதத்திலிருந்து, அக்., 2ம் தேதி வரை 713 பேரிடம், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 61 பேரிடமிருந்து, 15 ஆயிரத்து 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் அபராதம் வசூல் செய்தல் போன்ற பணிகளில், கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 3 வாரங்களாக ஆய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள இடத்தின் அருகே, 24 கடைகளில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.