புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு என்.ஐ. ஏ. இ.டி,சோத னைக்கு மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்.

Spread the love

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு என்.ஐ. ஏ. இ.டி,சோத னைக்கு மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்.

புதுக்கோட்டை செப்.24.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மாவட்ட அலுவலகங்க களில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ. இ.டி,சோதனையை கண்டித்து மற்றும் கைது செய்த தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் ஆலங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாக அமைப்பு சார்பில் வடகாடு முக்கத்தில் சாலை மறியல் போ ராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஆலங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் கட்சியின் நகர செயலாளர் அப்துல் ரஜாக் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மாவட்ட அலுவலகங்களில் என் ஐ ஏ இ.டி,அதிகாரிகள் சோதனை செய்துவரு கின்றனர். அப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதனை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் புதுக்கோட்டை மா வட்டம் ஆலங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு எஸ் டிபிஐ கட்சி சார்ந்த நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஜனநாயக அமைப்புகள் மீது நடத்தி வரும் இந்த சோதனையை கண்டித்து கோ ஷம் எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா நந்தினி சப்-இ ன்ஸ்பெ க்டர் கலைச்செல்வம் மற்றும் நதியா ஆகியோரது தலைமை யிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாப்புலர் பிரிண்ட் ஆஃப் நிர்வாகிகள் எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போராட்டத்தில் ஈடு பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டப த்தில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை அனுமதி இன்றி திடீர் சாலை மறிய ல் ஈடுபட்டதாக கூறி ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர்கள் கலைச்செல்வன் மற்றும் நதியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவத்தில் தப்பியோடிய டிரைவர் கைது.
Next post களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பி.எப்.ஐ மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்