புதுக்கோட்டை அருகே கஞ்சா பொட்டலம் பறிமுதல்.
புதுக்கோட்டை அருகே கஞ்சா பொட்டலம் பறிமுதல்.
புதுக்கோட்டை. ஆக.5-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுக்கு எதிராக கஞ்சா பொட்டலம் விற்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சப்-இன்ஸ் பெக்ட ர்கள் பாலமுருகன் மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான தனிப்ப டை போலீசார் புதுக்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுப் ட்டனர்.
அப்போது திருக்கோர்ணம் காவல் சரகம் பள்ளத்துவயல் செட்டியார் குளம் சீமை கருவாமரம் உள்ள காட்டில் கஞ்சா விற்றுக்கொண்டிரு ந்த திருக்கோணம் நத்தம் பண்ணை காலனி சுப்பையா மகன் தேங் காய் ( எ) ரமேஷ் அரவிந்த் (வயது 28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த காலனி பாலமுருகன் மகன் நந்தகோவலன் ( வயது 26 )ஆகிய இருவ ரிடமிருந்து கஞ்சா சுமார் 150 கிராம் மற்றும் 2 மொபைல் போன் ஆகி யவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் திரு க்கோர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.