புதுக்கோட்டை அருகே காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல் வித்திட்ட மாணவர்களு க்கு கலைவிழா நடத்தி அசத்திய தன்னார்வலர்கள்..
புதுக்கோட்டை அருகே காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல் வித்திட்ட மாணவர்களு க்கு கலைவிழா நடத்தி அசத்திய தன்னார்வலர்கள்..
புதுக்கோட்டை,அக்.4
:காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல்வித்திட்ட மாணவர்களு க்கு கலைவிழா நடத்தி பொதுமக்களின் பாராட்டைப் பெற்று தன்னா ர்வர்கள் அசத்தியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களி ன் கற்றல் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம் பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாக ங்களுக்கு வெளியே மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வ லர்கள் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குத ல் மற்றும் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திற ன்களை இல்லம் தேடி கல்வித் திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் தினசரி 1 முதல் 1 1/2 நேரம் வரை மாணவர்கள் அன்றாட கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 1 முதல் 5 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெ ற்ற தன்னார்வலர்களும் ,6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைக ளுக்கு பட்டப்படிப்பு தகுதி கொண்ட தன்னார்வலர்களும் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6809 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதி ல் புதுக்கோட்டை ஒன்றியம் கட்டியவயல்,அடப்பகாரசத் திரம்,எல் லை குடியிருப்பு பகுதிகளில் பணிபுரிந்து வரும் தன்னார்வலர்கள் அனைவரும் குழந்தைகளின் இயல்புகளைப் புரிந்து கொண்டு அவ ர்களின் தனித்திறனை வளர்க்க மாதம் இருமுறை தனித்திறன் கொ ண்டாட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்களை மகி ழ்விக்க வேண்டும் என்பதற்காக தன்னார்வலர்கள் அனைவரும் ஒரு ங்கிணைந்து 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பலூன் உடைத்தல்,உருளைக்கிழங்கு பொருக்குதல்,தவளை போட்டி ஆகிய விளையாட்டுகளையும்,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முயல் ஓட்டம் ,சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் ஆகிய போட்டுகளும், 4 மற்றும் 5 வ குப்பு மாணவர்களுக்கு சாக்கு ஓட்டம்,லெமன் ஸ்பூன்,பிஸ்கட் சாப்பி டுதல் ஆகிய போட்டிகளையும் நடத்தி முதல் மூன்று இடங்களை பிடி த்த மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
அதே போல் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 200மீட்டர் ஓட்ட ப்பந்தயம்,தாவி தாவி முறுக்கு சாப்பிடுதல் ,விளக்கு ஏற்றுதல் ஆகிய போட்டிகளும்,8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குதிறமைக்கு ஓர் சவால் போட்டி,குண்டு எறிதல் ,200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிக ளையும் நடத்தி முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை தேர்த்தெடுத்தனர்.
விழாவினை காணவந்த பெற்றோர்களுக்கும் மியூசிக்கல் சேர் போ ட்டியினை நடத்தி முதல் 3 இடங்களைப் பிடித்த பெற்றோர்களை தேர் ந்தெடுத்தனர்.
மாணவர்கள விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைக்க வரு கை தந்திருந்த ஒருங்கிணைந்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங் கமணி அவர்கள் கட்டியாவயல் தன்னார்வலர்கள் வினோதா, ‘மீனாட் சிபிரியதர்ஷினி,.கலைச்செல்வி,சி.எம்.மலர்விழி மற்றும் அடப்பகா ரசத்திரம் தன்னார்வலர்கள்பிரியா,.மீனா, கலைச்செல்வி, பவானி மினிஷா,ரெ்பாலாமணி மற்றும் எல்லைப்பட்டி தன்னார்வலர் ஆதிதி வ்யா மற்றும் தன்னார்வலர்கள் அருணா,ஆனந்தி,புவனேஸ்வரி ஆகியோரின் தன்னலமிக்க சேவையை பாராட்டி சான்றிதழ் வழங் கியும் பொன்னாடை அணிவித்தும் பாராட்டினார்.
பின்னர் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களின் சார்பில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்துப் பேசினார்.
விழாவில் இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆலோசகர் மணவாளன் இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் வீரமணி,அடப்ப கார சத்திரம் தலைமை ஆசிரியை சிவமலர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .
விழாவில் கட்டியாவயல்,அடப்பகாரசத்திரம்,எல்லைப்பட்டி ஆகிய குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் அவர்களது பெற் றோர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவ- மாணவிகளின் சார்பில் நடைபெற்ற மாணவர் அணிவகுப்பு,கராத்தே,சிலம்பம் போன்ற கலைநிகழ்ச்சிகள் காண் போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக் கது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வினோதா,மீனாட்சி,ஆதி திவ்யா ஆகியோர் தலைமையில் இல்லம தேடி கல்வி திட்ட தன்னார்வலர்க ள் செய்திருந்தனர்.
விழா குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் வினோதா கூறியதாவது: எனது பெயர் வினோதா.நான் கட்டியாவயல் மைய த்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறேன்.என்னுடைய நோ க்கம் எல்லாம் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அதனை ஊக்குவித்து இவ்வுலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்
என்பதே ஆகும்.எனவே தான் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கி ய நூறாவது நாளில் கட்டியாவயல்,அடப்பகாரசத்திரம் பகுதியை சே ர்ந்த தன்னார்வலர்கள் அனைவரும் சேர்ந்து மாணவ- மாணவிகளு க்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினோம். அதே போல் எங்கள் மையத்தில் சுதந்திர தினம்,சுற்றுச்சூழல் தினம்,காமராஜர் பிறந்த தினம்,ஆசிரியர் தினம் என பல்வேறு விழாக்களை கொண்டாடி மா ணவர்களை மகிழ்வித்து வருகிறோம்.சனி,ஞாயிறு அன்று மாண வர்களுக்கு நடனம் கற்றுத்தருகிறோம்.
மாணவர்களிடம் உள்ள வாசிப்புத்திறனை மேம்படுத்த அனைத்து மாணவர்களையும் நூலகம் அழைத்துச் சென்று நூலக உறுப்பின ராக ஆக்கி உள்ளோம்.மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது என நினைத்து தற்போது காலாண்டு விடுமுறையில் தன்னார்வலர்கள் 13 பேர் சேர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு விழா நடத்தி உள்ளோம்.
இதனால் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது.விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் ,தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனநிலை உடையவும் தங்களை வளர்த்துக் கொள்கிறார் கள் என்றார்.