மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.

Spread the love

மதுக்கரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.

கோவை அக்டோபர் 5-

கோவை மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரிப்பது உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் கூலி உயர்வு வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும் நடத்தினர்.

இதில் மதுக்கரை நகராட்சியில் பணியாற்றும் 32 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பங்கேற்றனர்

அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று விட்டு பணிக்கு திரும்பினர். அதன்படி இன்று மதுக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 32 தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணிக்கு வந்தனர்.

அப்போது அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.இதையடுத்து அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் இணைந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் பிச்சை மணி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மகிஷாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி
Next post பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் வேலூர் இப்ராஹிம் பேச்சு,