மனிதத்தை போற்றியும் SIOவின் 40 வருட சாதனையை பயணத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

Spread the love

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தியும் மனிதத்தை போற்றியும் SIOவின் 40 வருட சாதனையை பயணத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ். ஐ. ஓ வின் அகில இந்திய தலைவர் சல்மான் அஹமத், பொதுச் செயலாளர் செய்யது அஹ்மத் முஜக்கீர் துறை செயலாளர்கள் இப்ராஹிம் சையத், ஃபவாஸ் சீன், துல்கர் நைன் ஹைதர் நிஹால் மற்றும் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்
இன்று கோவைக்கு வந்தனர்.

தொடர்ந்து கோவை கரும்புகடையில் உள்ள எஸ்ஐஓ அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஐ.ஓ தேசிய செயலாளர்கள் முஜக்கீர், பவாஸ், கூறுகையில், 1982ல் துவங்கப்பட்ட SIO நாட்டின் நாற்புறங்களிலும் பெருநகரங்கள், கல்வி வளாகங்கள், கிராமங்கள், முஹல்லாக்கள், குக்கிராமங்கள் வரை கிளைகளைப் பரப்பி நாட்டின் மாபெரும் இஸ்லாமிய மாணவர் அமைப்பாக வளர்ந்து நிற்கிறது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), இறைப்பாதையில் தனது 40 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து இருக்கிறது. இப்பயணம் சத்தியத்தை முன்னிறுத்தி, சமூக மாற்றத்தை எதிர்நோக்கி, தொடர் போராட்டங்களினால் நிறைத்திருந்தது என்று கூறுவது மிகையாக இருக்காது.
சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு கல்வி, ஒழுக்கம், அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள், நீதியமைப்புகள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என SIO நம்புகிறது.

40 ஆண்டுகால SIO-வின் பயணம் என்பது 40 ஆண்டுகால அறிவு உற்பத்தியின் வரலாறு ஏழைகள், சமூகத்தின் விளிம்பில் இருப்போர் என அனைவருக்கும் கல்விக்கான வாய்ப்பை உருவாக்குதல், ஆக்கப்பூர்வமான கல்விச் சூழலை உருவாக்குதல், ஆய்வறிவையும் சுதந்திர சிந்தனையையும் வளர்த்தெடுத்தல், ஆராய்ச்சி, உயர் படிப்புகளில் மாணவர்களை பங்கெடுக்கச் செய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். மாணவர்களை அறிவைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வமூட்டி, அவர்களின் திறன்களை அவர்களின் வாழ்வில் மட்டுமல்லாது சமூகத்திற்கும் பயனளிக்கும்படியான வழிகாட்டுதலை SIO வழங்குகிறது.

புத்தகக் கல்வி, மதிப்பெண் என இவற்றின் மத்தியில் சுழன்று கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டிவந்த கல்வி வளாகங்களில் புதிய சிந்தனைகள், முயற்சிகள், கலை, இலக்கியம் ஆகியவற்றைக் கொண்டு மாணவ வசந்தத்திற்கான புதிய வெளியை SIO ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் நீதியுடனும் சுதந்திரத்துடனும் வாழும் சமூக அமைப்பையே SIO நிறுவ விரும்புகிறது.அந்த திசையிலேயே அதன் பயணம் என்றும் தொடரும் நாளைய விடியலுக்கான விதைகளாக SIOவின் உறுப்பினர்கள், ஊழியர்கள் நிச்சயம் பணி செய்பவர்கள். இவ்வாறு பேசினார்.

உடன், எஸ்.ஐ.ஓ தேசிய செயலாளர்கள் முஜக்கீர், பவாஸ், மாநில செயலாளர்கள் பாயிஸ், முகம்மது சார்ஜுன் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சேலம் மாவட்டம்அம்பேத்கர் சிலை அமைக்க ஆட்சியரிடம் மனு
Next post கோவை குனியமுத்தூரில் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலின் புதிய கிளை துவக்கம்