மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை. ஒருவர் படுகாயம்.

Spread the love

மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை. ஒருவர் படுகாயம்.

கோவை அக்டோபர் 3-
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூரா–ட்சி–க்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி அடந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், பவானிசாகர் நீர் தேக்க பகுதியாக உள்ளதாலும் அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளது.
மேலும் இப்பகுதியில் நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே லிங்காபுரம் வனத்துறை சோதனை சாவடிக்கு அருகே உள்ள செந்தில், புஷ்பா ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் அதிகாலை நேரத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையும் காட்டு யானை தாக்க முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான
அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓட முயற்சித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் எழுந்து சென்று ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்

இதற்கிடையே யானை அங்கு வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நாளை ஆயுத பூஜை விழா கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.
Next post காந்தி ஜெயந்தி அன்று தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 36 பேர் கைது.