மேட்டுப்பாளையம் தென்திருமலை திருப்பதி கோயிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

Spread the love

மேட்டுப்பாளையம் தென்திருமலை திருப்பதி கோயிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை அக்டோபர் 5-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து கருட சேவையும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நேற்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி திருத்தேரில் கோவில் நடையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் 1000த்திற்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து, கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்கினர். மலையப்ப சுவாமி பக்தர்கள் புடைசூழ கோவிலை வலம் வந்தார்.

இதில் கே.ஜி தொழில் நிறுவனங்களின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஸ்ரீ கண்ணபிரான் நிறுவன தலைவர் ஸ்ரீஹரிபாலகிருஷ்ணா, கே.ஜி.டெனிம் நிறுவன தலைவர் ஸ்ரீராம்பாலகிருஷ்ணா, சீனிவாசா கார்மென்ட்க்ஸ் நிறுவன தலைவர் பிரனவ், மேட்டுப்பாளையம் ஏ.கே‌.செல்வராஜ் எம்.எல்.ஏ, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தீபாவளி பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்.
Next post நர்சு கொலை நர்ஸ் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்