வழக்கறிஞர் R S உமாசங்கர் அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் பாராட்டு

Spread the love

வழக்கறிஞர் R S உமாசங்கர் அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் பாராட்டு; கடலூர் மாவட்டம் சிதம்பரம்.
22 செப்டம்பர் 2022 அன்று
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்யும் விழாவில் சிதம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் நலக்குழு செயலாளரும், முன்னாள் தலைவரும் சிதம்பரம் அனைத்திந்திய அண்ணா திமுகவில் 25 ஆவது வார்டு செயலாளரும் ஆகிய பொறியாளர் R S உமாசங்கர் அவர்கள்
கலந்துகொண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து பொறியாளர் நல குழு தலைவர் மதிப்புக்குரிய பொறியாளர் ந முத்து அவர்கள்,
சிதம்பர நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திமுக முக்கிய பிரமுகர்கள் என பலரும் நேரில் சென்று மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மற்றும் சந்தன மாலை அணிவித்தும் அவர்தம் பணி மிகவும் சிறப்படைய வாழ்த்துக்களையும் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் சமூக ஆர்வலர்
Next post கோவையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார்…