கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு குளிர் மற்றும் பனிக்கால நலத்திட்ட உதவிகளாக போர்வைகள் வழங்கப்பட்டது
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு குளிர் மற்றும் பனிக்கால நலத்திட்ட உதவிகளாக போர்வைகள் வழங்கப்பட்டது…
கோவை டிச 2,
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த பல்வேறு அணியினர் தொடர்ந்து மாபெரும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து மக்களின் பாராட்டை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய்,தற்போது குளிர் மற்றும் பனிக்காலம் என்பதால் வயதில் மூத்த ஆதரவற்றோர்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர்கால ஆடைகளை வழங்க அவரது ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.இந்நிலையில் தளபதி விஜய் ஆணைக்கிணங்க தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில்,கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாணவரணி சார்பாக அதன் தலைவர் பாபு தலைமையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் விக்கி கலந்து கொண்டார்..தொடர்ந்து மாணவரயினர் போர்வைகளை தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் வழங்கினர்.போர்வைகளை பெற்று கொண்ட முதியவர்கள் நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்தினர்.. இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பூமார்க்கெட் என்.கே.எஸ் கார்த்திகேயன் பொருளாளர் ரத்தினபுரி ராஜா, துணைத்தலைவர் மாரி ராஜ், இணை செயலாளர் அருண்குமார், அமைப்பாளர் செந்தில்குமார், துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் சிங்கை நகர மாணவரணி தலைவர் தளபதி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்…