கோவையில் கிறிஸ்மஸ் விழாவை ஒட்டி வீடுகள் கடைகள் மால்களில் அலங்கார தோரணங்கள் களை கட்டியது.
கோவையில் கிறிஸ்மஸ் விழாவை ஒட்டி வீடுகள் கடைகள் மால்களில் அலங்கார தோரணங்கள் களை கட்டியது.
கோவை டிசம்பர் 1-
கோவையில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி வீடு, கடைகள், மால்களில் குடில் அலங்காரம், தோரணங்கள் களை கட்டி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண் டாடப்படுகிறது.இதை யொட்டி கோவையில் ‘ஸ்டார்’, தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் ‘கேக்’ விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால் களில் கிறிஸ்மஸ் குடில் அலங்காரங்கள், தோரணங் கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இதனால் கோவை மாநகரம் விழாக் கோலம் பூண்டு களைகட்டி உள்ளது.
குழந்தை இயேசுவை வரவேற்கும் வகையிலும், கிறிஸ்மஸ் பண்டிகையின் உற்சாகத்தை வெளிப் படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பு கிறிஸ்துமஸ் ‘ஸ்டார்’ கட்டப்பட்டு உள்ளன. வருகிற 2023-புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர்கள் வீட்டு வாசலிலும் ‘ஸ்டார்கள்’ அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் பண்டி கையை யொட்டி கிறிஸ்த வர்கள் வீடுகளில் வண்ண தோரண அலங்காரம், குடில்கள் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அழகிய சீரியல் விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டி கையை யொட்டி நண்பர் கள், உற வினர்கள், குழந்தை களுக்கு கொடுபதற்காக பரிசுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.
கோவையில் கிறிஸ்து மஸ் பண்டிகையை யொட்டி ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், சிறப்பு அலங் காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை டவுன் ஹால் 5 முக்கு சாலை, காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஸ்டார் விளக்குகள் பல வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுபோன்று கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், அலங்கார பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட பலர் தற்போது புது துணிகளையும் எடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமாக இடம்பெறுவது பிளம் கேக் ஆகும். இந்த பிளம் கேக் தயாரிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பிளம் கேக், பட்டர்கேக், சாக்லெட் புட்டிங்கேக், புரூட்கேக், நட்ஸ் கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள், சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் அணிந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆசி வழங்கி இனிப்புகள் வழங்கி வருகின்றனர்.