மோடி அரசின் ஊழலை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள்-காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவின் மாநில தலைவர் கே.சந்திரசேகரன் பேட்டி, 

Spread the love

மோடி அரசின் ஊழலை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள்-காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவின் மாநில தலைவர் கே.சந்திரசேகரன் பேட்டி,

கோவை ஆக் 28,

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், இன்று, காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவின் சார்பாக, செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது, இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த, வசந்தகுமாரின் 3ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரது திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவின் மாநில தலைவருமான கே.சந்திரசேகரன் கூறுகையில்..

 

 

 

அக்டோபர் 1 ம்தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா, நடைபெற உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு கோவையில் அவருக்கு சிலை வைக்க, இன்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க பட்டுள்ளது,

அதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம், இடம், கேட்டு, அவர்கள் ஒத்துழைப்புடன் மாநகரில் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மேலும், நடைபெற உள்ள, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு சார்பாகவும், மோடி அரசின், ஊழல்களை பொதுமக்களிடம் அம்பல படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார், இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கலைபிரிவு மாநில செயலாளர் துளசிராஜ், பாசமலர் சண்முகம், அரிமா கே.என், ஆறுமுகம், நடூர் கனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
Next post குரும்பேரி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி வார்டு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு