ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கெட்டிவ் எக்ஸ்போ செப் 2ம் தேதி துவங்குகிறது அக்மா தென்னிந்திய செயலாளர் சரவணன் தகவல்

Spread the love

ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கெட்டிவ் எக்ஸ்போ செப் 2ம் தேதி துவங்குகிறது அக்மா தென்னிந்திய செயலாளர் சரவணன் தகவல்

 

கோவை செப் 02,

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்ததில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கேட் கண்காட்சியின், 2ம் பதிப்பு குறித்து அக்மா அமைப்பின், தென்னிந்திய செயலாளர் சரவணன், அகில இந்திய தலைவர் வீன்னி மேத்தா, தலைவர், ரமாசங்கர் பாண்டே ஆகியோர் கூறியதாவது,வாகன விற்பனைக்கு பின் பெருவாரியாக அதன் உதிரிபாகங்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை , கோவை கொடிசியா வளாகத்தில் செப் 2, மற்றும் 3 ம் ஆகிய இரண்டு நாட்கள் ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கெட்டிவ் எக்ஸ்போ நடைபெற உள்ளது, இந்த கண்காட்சியில், இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆப்டர் மார்க்கெட் தொழில் பிரிவை சேர்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.இதன் முதல் பதிப்பு கடந்த 2022 ஜூன் மாதம், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது.இதில் பல்வேறு சிறு,குறு வாகன பழுது பார்ப்பவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.அதன் தொடர்ச்சியாக இக்கண்காட்சியின் இரண்டாம் பதிப்பாக கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதிலும் கோவையை சார்ந்த, வாகன உரிமையாளர்கள், பழுது நீக்குபவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார். மேலும், இந்த கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைக்க உள்ளதாக கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மக்கள் குறைகளை கேட்டறிந்த தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன்
Next post மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சைமா அலுவலகத்தில் இந்தியாவில் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் சிலையை திறந்து வைத்தார்