கோவை ஆர் எஸ் புரத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு மகா அன்னதானம் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஆரோக்கிய ஜான் துவக்கி வைத்தார்

Spread the love

கோவை ஆர் எஸ் புரத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு மகா அன்னதானம் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஆரோக்கிய ஜான் துவக்கி வைத்தார்.

கோவை டிச.25-
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சபரிகிரிவாசன் பஜனை குழு சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம் இந்தாண்டும் 16வது ஆண்டாக அய்யப்பன் பூஜை மற்றும் அன்னதானம் விழா கோவை ஆர் எஸ் புரம் கவுலி பிரவுன் ரோடு வன சரக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.குருசாமி ஹரிதாஸ் தலைமை ஐயப்பனுக்கு ஆராதனையுடன் பஜனை பாடல்கள் பாட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்த அன்னதானத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட தொண்டாமுத்தூர் ரவி, கோவை எஸ் எஸ் குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் ,சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஹுசைன் பாய் மற்றும் அந்தோனி, தெற்கு மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் டிஸ்கோ காஜா, சுந்தர்,ஜெயபிரகாஷ், முருகன், மணிகண்டன், பாலமுருகன், அழகர்,மணி,முருகேஷ், ஜோதிடர் சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post வனவிலங்கு தாக்கியதில் மூவர் படுகாயம் நெல்லியாளம் உபட்டி பகுதி பொதுமக்கள் பீதி
Next post தந்தை பெரியார் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கோவை குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை