கோவையில் கேக் மிக்சிங் திருவிழா 150 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம்…

Spread the love

கோவையில் கேக் மிக்சிங் திருவிழா 150 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம்…

 

கோவை அக் 13,

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…

 

இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள,லீ மெரிடியன் ஓட்டலில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 150 கிலோ தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் லீ மெரிடியன் ஊழியர்கள் மற்றும்குழந்தைகள், சமூக ஆர்வலர்கள்,ஊழியர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.இது குறித்து கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில்,ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும்,இந்த ஆண்டு கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கூன்ஜ் தன்னார்வ நிறுவனத்திற்கு பயன்பாட்டு பொருட்கள் ஒப்படைப்பு
Next post பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா – இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் பிரதீப் மோகன்ராஜ் துவக்கி வைத்தார்.