பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா – இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் பிரதீப் மோகன்ராஜ் துவக்கி வைத்தார்.

Spread the love

பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா – இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் பிரதீப் மோகன்ராஜ் துவக்கி வைத்தார்.

கோவை அக் 19,

கோவை மதுக்கரை சாலையில் அமைந்துள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் முதுநிலை மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்து வீரர் பிரதீப் மோகன்ராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் நிறுவனர் கனகாச்சலம் மற்றும் பள்ளி மேலாளர் வசந்தராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பரிசு பொருள் வழங்கினார்கள்.

இந்த பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் தலைமையில் 5 தினங்களுக்கு முன்பே மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை பள்ளி முதல்வர் வனிதா, தாளாளர் ராஜன் ஆகியோர் தலைமையில் 1500 பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.

சிறப்பு விருந்தினர் தேசிய கொடியையும்,பள்ளியின் துணை முதல்வர் முத்துகுமாரி பள்ளி கொடியையும் விளையாட்டு இயக்குனர் விளையாட்டு கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தீரன் சின்னமலை நீல நிற அணிவகுப்பு, வேலுநாச்சியார் பெயரில் பச்சை நிற அணிவகுப்பு,வீரபாண்டி கட்டபொம்மன் பெயரில் சிவப்பு நிற அணிவகுப்பு,வாஞ்சி நாதன் பெயரில் மஞ்சள் நிற அணிவகுப்பு நடத்தப்பட்டது.

 

சிறப்பு விருந்தினர் விளையாட்டு ஜோதியை ஏற்றிவைத்து தொடர் ஓட்டப் போட்டியை துவக்கி வைத்தார்.

 

 

இந்த விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வீரபாண்டி கட்டபொம்மன் சிவப்பு நிற அணிவகுப்பு அணியும்,இரண்டாம் இடத்தை வேலுநாச்சியார் பச்சை நிற அணியும் பெற்றது.

 

வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் இந்திய கால்பந்து வீரர் பிரதீப் மோகன்ராஜ் பரிசுகளை வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் பிரதீப் மோகன்ராஜ் கூறியாதவாது:

 

இந்தியா கால்பந்து விளையாட்டில் உலக தர வரிசையில் 100 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. கால்பந்து விளையாட்டு போட்டிக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நிறைய கிளப்களை உருவாக்கிட வேண்டும்.மேலும் கால் பந்து விளையாட்டு மைதானங்களை அதிகரித்து பயிற்சி அளித்திட வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் கேக் மிக்சிங் திருவிழா 150 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம்…
Next post அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்