தினமலர் நாளிதழ் கண்டித்து சிவகாசி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

Spread the love

தினமலர் நாளிதழ் கண்டித்து சிவகாசி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சிவகாசி செப் 2, தமிழக முதல்வர் ஆரம்ப கல்வி கற்கும் ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.இதனை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வரவேற்று,பாராட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இன்நிலையில் தினமலர் நாளிதழ் இத்திட்டத்தை மிகவும் விரும்பத்தகாத வன்மமான முறையில் செய்தியை வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை பார்த்து அனைத்து தரப்பு மக்களும் தினமலர் நாளிதழை கண்டித்தும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஏசுதாஸ் தலைமையில் இக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் தினமலர் நாளிதழை எரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு

மாவட்ட செயற்குழு உறுப்பினர்

செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

இப்போராட்டத்தில் வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார்,

தொழிலாளர் விடுதலை முன்னணி

மாவட்ட அமைப்பாளர் இராமச்சந்திரன், காட்சி ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் பைக் பாண்டியன், கிருஸ்தவ சமூக நீதி பேரவை மாவட்ட அமைப்பாளர் லில்லி ராஜன்,சமூக ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் தமிழ் செல்வம், நகர துணை செயலாளர் தீபன் சக்ரவர்த்தி,திருத்தங்கள் நகர துணை அமைப்பாளர் சாமுராய் அமிர் ,திருத்தங்கள் நகர பொறுப்பாளர் வல்லவன்,திலக்கனி,முருகன்,சாமுவேல்,மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மொழிப்போர் தியாகி மு.மா.சண்முகசுந்தரம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி
Next post தினமலர் நாளிதழுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் கடும் கண்டனம்.