தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பன்றிகள் அனுப்ப தடை. கோவையில் பன்றி பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Spread the love

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பன்றிகள் அனுப்ப தடை. கோவையில் பன்றி பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

 

 

 

கோவை நவம்பர் 29-

 

 

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒவ்வொரு வாரமும் 3 டன் அளவிற்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாக்கு செல்லக்கூடிய பன்றிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

 

 

மேலும் கேரளா அரசால் வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் தற்காலிகமாக தமிழகத்தில் இருந்து பன்றிகள் கொண்டுவரக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 டன் அளவிற்கான பன்றிகள் தேங்கியிருக்கிறது.

 

 

 

அதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்ககூடிய பன்றி பண்ணை விவசாயிகள் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

அவர்களது கோரிக்கையாக கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் பன்றி பண்ணை வியாபாரம் அதிகளவு அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பன்றி பண்ணை விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது.

 

 

 

இருப்பினும் அதிக அளவில் கேரளாவிற்கு பன்றிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாக்கு பன்றிகள் அனுப்ப முடியாததால் பல கோடி அளவிற்கு வர்த்தக இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல் மருத்துவ அலுவலர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
Next post தனியார் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.