தனியார் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

Spread the love

தனியார் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

 

 

 

கோவை நவம்பர் 29-

 

 

 

சரவணம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனம் மோசடி தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனம் மோசடி தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதுதொடா்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவை, சரவணம்பட்டியில் சிவ சூா்யகிருஷ்ணா சிட்ஸ் இந்தியா (பி) லிட் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநா் முரளிதரன், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து

 

 

 

 

முதலீடாக கோடிக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததாக ஏற்கெனவே கோவை மாநகர குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபா்கள் எவரேனும் இருப்பின் இவ்வழக்கு தொடா்பாக தகுந்த ஆவணங்களுடன் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவை அணுகி புகாா் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பன்றிகள் அனுப்ப தடை. கோவையில் பன்றி பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Next post சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது.