டெஸ்ட் பர்ச்சேஸ் முறையில் வணிகவரி விலக்கு அளிக்க வணிகவரி துறை அதிகாரியிடம் வியாபாரிகள் மனு.

Spread the love

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையில் வணிகவரி விலக்கு அளிக்க வணிகவரி துறை அதிகாரியிடம் வியாபாரிகள் மனு.

 

 

கோவை நவம்பர் 29-

 

 

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன், மாவட்ட தலைவர் இருதயராஜா, கோவை மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் வஹாப், மாநகர செயலாளர் பாக்யநாதன், இளைஞர் அணி செயலாளர் வேலுமயில் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.

 

 

 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

 

 

 

வணிகவரித் துறையினா ல் கடந்த மார்ச் மாதத்தில் கடைகளில் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்சேஸ் (சோதனை கொள்முதல்) செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியான போதே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக, தனது கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. மீண்டும் டெஸ்ட் பர்சேஸ் சம்பந்தமான வணிக வரித்துறையின் அறிவிப்பு 6.9.2022-ந் தேதி வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் வணிக ர்களிடம் பொருட்கள் வாங்கி அதை டெஸ்ட் பர்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000 வரை வசூலிப்பதாகவும்,

 

 

 

டெஸ்ட் பர்சேஸ் அடிப்படையில் கடைகளுக்கு வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து மிகவும் பெரும் தொகை வரியாகவும், அபராதமும் விதிப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோைவ மாவட்டத்திற்கு புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

 

 

 

அனைத்து சில்லரைக் கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும்போது, அதற்கான வரி செலு த்தியே பொருட்க ளை வாங்கி வந்து, அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அப்பொருட்கள் ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்பட்டது.

 

 

 

ஆனாலும் வணிக வரித்துறை அதிகாரிகள், கடைகளில் டெஸ்ட் பர்சே ஸ் என்ற பெயரில், பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே மிகப்பெரும் கேள்வி க்குறியாக்கும் செயலாகும்.வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

 

 

எனும் கருத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிரானது அல்ல. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், துறைமுக கண்டெய்னர்கள் மூலம் கொண்டுவரப்படும் நிலையில் அவற்றையும், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவ னங்களை யும், ஆய்வு செய்தல் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும்.

 

 

 

எனவே வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்கள், தயாரிப்பா ளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுத்திட ஆவண செய்திட வேண்டும். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணை நிற்கும் என்பதை உறுதி செய்து, வணிகர்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை அமைந்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

 

 

 

இந்த டெஸ்ட் பர்சேஸ் குறித்து நடைமு றையை குறைந்தது 6 மாத காலம் தொடர் விழிப்புணர்வை அனைத்து வணிகர்களுக்கும் ஏற்படுத்திய பிறகே ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்று – வரவு செய்கின்ற வணிகர்களிடம் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கடைகள் சிறு, குறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின்  முதல் பட்டமளிப்பு விழா*   
Next post தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 29 லட்சமாக அதிகரிப்பு. பச்சை நிற பால் பாக்கெட் அதிக விற்பனை.