ஆன்லைன் மூலம் கார் வாடகைக்கு விற்பனை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது.

Spread the love

ஆன்லைன் மூலம் கார் வாடகைக்கு விற்பனை. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது.

 

கோவை நவம்பர் 30-

 

 

 

அடமானம் வைக்கும் கார்களை சதி திட்டத்திற்கு பயன்படுத்தும் பயங்கரவாத கும்பல், பெரும் ஆபத்தை தடுக்குமா? காவல்துறை

 

கோவையில் சமீபகாலமாக வாகனங்களை வங்கி மூலம் மாதத் தவனை திட்டத்தில் வாங்கும் நபர்கள். அவர்களின் அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை மற்றொரு நபர்களுக்கு அடமானம் வைக்கின்றனர்.

 

 

 

அந்த வாகனங்களை அடமானம் வாங்கும் நபர்கள் அதனை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காவல் துறையினர் குழப்பம் அடைந்து உள்ளனர். சமீபத்தில் கார் வெடிப்பு சம்பவத்தில் அவர் பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை மிகுந்த சிரமத்திற்கு பின்பு கண்டு பிடித்தனர்.

 

 

 

இதுபோன்று வாகனங்களை அடமானம் எடுக்கும் நபர்களை அவர்கள் கொடுக்கும் தொகையை விட கூடுதல் தொகையை (ராக்கெட் வட்டி) அடமானம் வைத்தவர்களிடம் கேட்கின்றனர். இதனால் அவசர தேவைக்காக அடமானம் வைக்கும் நபர்கள் அதனை அப்படியே அவர்களிடம் விட்டு விடுகின்றனர்.

 

 

 

இதனால் அடமானம் வாங்கியவர்கள் அந்த வாகனங்களை தமிழகம் மட்டுமல்லாது வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று கொலை – கொள்ளை, வழிப்பறி, அரிசி கடத்தல், போன்ற சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் வாகன எண்ணை வைத்து காவல் துறையினர் தேடும் போது குற்றவாளிகள் பிடிப்பது தாமதம் ஆகிறது.

 

 

 

இதனால் பல்வேறு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமலும் போய் விடுகின்றன. தற்பொழுது உள்ள கோவை மாநகர காவல் ஆணையர் துரிதமாக செயல்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

இந்த நிலையில்

திருவனந்தபுரத்தில் ஆன்லைன் மூலம் கார்களை வாடைக்கு கொடுக்கும் சில நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்த ஒரு கும்பல் பின்னர் அந்தக் கார்களை திரும்பி ஒப்படைக்கவில்லை.

 

 

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் திருவனந்தபுரம் வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருச்சூர் அருகே உள்ள வாடாபள்ளி பகுதியைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

இவரிடம் நடத்திய விசாரணையில் கோவை குனியமுத்து பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து வஞ்சியூர் போலீசார் கோவை வந்து முகமது ரபிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் தண்டனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது.

 

 

 

இவர்களை இதே போல் கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்நாட்டிலும் கார்களை வாடகைக்கு எடுத்து உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கோட்டயத்திலும் இதே போல் கார்களை வாடகைக்கு எடுத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார்.

 

 

 

விசாரணை பின் போலீசார் முகமது ரபீக்கை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Next post மஞ்சூர்குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்.