
கோவை மேட்டுப்பாளையத்திற்கு இடையே இனி 7 நாட்களும் ரயில் சேவை.
கோவை மேட்டுப்பாளையத்திற்கு இடையே இனி 7 நாட்களும் ரயில் சேவை.
கோவை டிசம்பர் 1-
கோவை-பஸ்சில் ஊர், இனி ஊராக சுற்ற வேண்டாம் மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் வரும், 4ம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு மேம்பால பணி காரணமாக பஸ்சில் ஊர், ஊராக சுற்றி வந்த பயணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினமும் ‘மெமு’ பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 8:20, 10:45 மதியம், 1:05, மாலை, 4:45, இரவு, 7:15 மணிக்கு என, ஐந்து முறை கோவைக்கு செல்கிறது.இதே போன்று கோவையில் இருந்து, காலை, 9:35, 11:50, மதியம், 3:45, மாலை, 5:55, இரவு, 8:25 என ஐந்து முறை மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படுகிறது.
காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து தினமும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக ‘கட்’கொரோனா காலகட்டத்துக்கு முன்பு, சிறிது காலம் மட்டும் இந்த பயணிகள் ரயில், ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்பட்டது.
கொரோனா பிரச்னையால் அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டபோது, இந்த சேவையும் ரத்தானது. அதன்பின் இயல்பு நிலை திரும்பி, கடந்த ஒரு ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. அதனால் பஸ்கள் பல ஊர்களை சுற்றி கொண்டு கோவைக்கு செல்கின்றன.
இதன்காரணமாக நீண்ட நேரம் பஸ்ஸில் பயணம் செய்வதால், குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகம், பள்ளி கல்லுாரிக்கு செல்ல முடியாத நிலை நிலவுகிறது.
பயணிகள் கோரிக்கை ஏற்புஅதேபோன்று ஞாயிற்றுக்கிழமையில் கோவைக்கு கடைகளுக்கு சென்று வரும் பொதுமக்கள், பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் ஞாயிற்றுக் கிழமையிலும் பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும் என, தென்னக ரயில்வே மற்றும் சேலம் கோட்ட ரயில்வேக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதனை பரிசீலனை செய்த தென்னக ரயில்வே நிர்வாகம், டிச., 4ம் தேதியில் இருந்து,
ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தில் ஏழு நாட்களும் பயணிகள் ரயிலை இயக்க உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 10:45 மாலை, 7:15 மணிக்கும், கோவையிலிருந்து பகல், 11:50-க்கும், இரவு, 8:25 மணிக்கும் என, நான்கு முறை பயண சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மற்ற நேரங்களில் வழக்கம் போல் ரயில் இயக்கப்படும், என ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் கூறுகையில்,’கோவை ரோட்டில் நடக்கும் மேம்பால பணிகள் காரணமாக உரிய நேரத்தில் தேவையான இடங்களுக்கு சென்று வர இயலவில்லை.
இதனால், கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை வாரத்தில் ஏழு நாட்களும் இயக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது’ என்றனர்.