
காரமடை நகராட்சியில்தெரு விளக்கு குடிநீர் குழாய் வாங்கியதில் முறைகேடு பாஜக கவுன்சிலர் குற்றச்சாட்டு.
காரமடை நகராட்சியில்தெரு விளக்கு குடிநீர் குழாய் வாங்கியதில் முறைகேடு பாஜக கவுன்சிலர் குற்றச்சாட்டு.
கோவை டிசம்பர் 1-
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாவெங்கடேஸ் தலைமை தாங்கினார். பொறியாளர் சோமசுந்தரம், துணைத் தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:- மல்லிகா(திமுக): அம்பேத்கர் நகர்பகுதியில் உள்ள கழிவறையை அகற்றி விட்டு ரேசன் கடை அமைக்க வேண்டும்.
அதற்கு பதிலாக இதே பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிவறை ஏற்படுத்த வேண்டும். தலைவர் உஷா வெங்கடேஷ்: ஆய்வு செய்தபின் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்னேஷ் (பாஜக): நகராட்சியில் தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள் 3 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊழல் நடைபெறுகிறது. எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எந்தவித பணிகளுக்கும் நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை நகர சபை கூட்டத்தில் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூட்டத்தில் மாதந்தோறும் எவ்வளவு கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது என தெரியப்படுத்த வேண்டும் என கூறி இருந்தேன். அதுகுறித்தும் தெரிவிக்கவில்லை. காலி இடங்கள் வைத்திருப்ப வர்கள் 6 வருடங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வருகிறது.
விக்னேஷ் (பாஜக): நகராட்சியில் தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள் 3 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊழல் நடைபெறுகிறது. எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எந்தவித பணிகளுக்கும் நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை நகர சபை கூட்டத்தில் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டத்தில் மாதந்தோறும் எவ்வளவு கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது என தெரியப்படுத்த வேண்டும் என கூறி இருந்தேன்.
அதுகுறித்தும் தெரிவிக்கவில்லை. காலி இடங்கள் வைத்திருப்ப வர்கள் 6 வருடங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை கட்டாயப்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் கடந்த காலங்களில் மார்ச் மாதம் வரை செலுத்திய வரியை இப்பொழுதே கட்ட வேண்டும் என நிர்ணயிப்பதை கண்டித்து வெளியேறுவதாக கூறிய அவர் நகர மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராம்குட்டி(தி.மு.க): நகராட்சியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வரும் போர்வெல் கிணறுகளுக்கு ஒரு சிலர் நகராட்சி அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைவர் உஷாவெங்கடேஷ்: இப்பிரச்சினையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குருபிரசாத் (திமுக): காரமடை நகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் ெரயில்வே மேம்பாலம் பகுதியில் ெரயில்வே நிர்வாகம் தான் தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக இதனை ெரயில்வே நிர்வாகம் தூய்மை ப்படுத்தாமல் வைத்துள்ளது.
இதனால் இப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் ஊடுருவி குடியிருப்புக்குள் நுழையும் சூழ்நிலையில் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ெரயில்வே நிர்வாகத்திடம் பேசி மேம்பால பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.
தலைவர் உஷா வெங்கடேஷ்: சம்மந்தப்பட்ட ெரயில்வே நிர்வாகத்திடம் பேசி உடனடியாக முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனிதாசஞ்ஜிவகாந்தி (அதிமுக): ஆர்.வி.நகர், ஏ.ஜி நகர் ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். 27-வது வார்டு பகுதியில் ஒரு சில வீடுகளில் 25-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு என கூறி வீட்டு வரி கட்டகோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். நகராட்சி சுகாதார துறையினர் சார்பில் நடத்தப்படும் மாஸ்கிளினிங் முறையால் பொதுமக்கள் அழைக்கப்படுதவால் இதனை தவிர்க்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். சைக்கிள் கடை ராமசாமி நகர் பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.
தலைவர் உஷா வெங்கடேஷ்: துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.