அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை யாரும் துன்புறுத்த வில்லை கோவை மருத்துவமனை டீன் விளக்கம்.
அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை யாரும் துன்புறுத்த வில்லை கோவை மருத்துவமனை டீன் விளக்கம்.
கோவை டிசம்பர் 2-
கோவை இரவில் அடித்து துன்புறுத்தியதாக, கலெக்டரிடம் பெண் புகார் அளித்தது தொடர்பாக, அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி.
தங்க முயன்றபோது, மருத்துவமனை ஊழியர்கள், அங்கு பணியில் இருந்த போலீசார் அனைவரும் தன்னை அடித்து விரட்டியதாக, கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக,
அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சுற்றியுள்ள 5,6 மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலத்துக்கும் சேவை செய்கிற மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். தினமும், 5,000 முதல் 6,000 பேர் வரை வெளிநோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, இங்கு வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அதுபோலவே, குறிப்பிட்ட நாள் இரவு, அந்த நபர் சந்தேகத்துக்கு உரிய வகையில், மருத்துவமனை வளாகத்துக்குள் இருந்துள்ளார். எனவே, அவரை வெளியேறும்படி காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு அந்த நபர்அராஜகமாக பேசி, அத்துமீறி செயல்பட்டதால், காவலர்கள் அவரை வெளியேற்றினர்.
மற்றபடி, அந்தநபர் கூறியதுபோல, அவரை எந்தவகையிலும் துன்புறுத்தவில்லை. அந்தப் பெண் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.