கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி மோசடி செய்த வாலிபர் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை.

Spread the love

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி மோசடி செய்த வாலிபர் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை.

 

 

கோவை டிசம்பர் 2-

 

 

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக, ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு கைதான நபரை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

பீளமேடுபுதூர் முருகன் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 29. அதே பகுதியில் ‘சக்தி பிளேஸ்மென்ட் சர்வீஸ்’ என்ற பெயரில், வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தினார். கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், விசா, விமான செலவுக்கு சில லட்சம் ரூபாய்கள் செலவாகும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்.

 

 

 

 

கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 88 பேர் ஒரு கோடி ரூபாய் பணம் செலுத்தினர்.

 

 

ஆனால், யாருக்கும் கனடாவில் வேலை வாங்கித் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், தமிழ்செல்வனை கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

 

அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல்செய்தனர். இரு நாட்கள் கஸ்டடி விசாரணைக்கு, அனுமதி வழங்கப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post நெகமம் பகுதியில் நாளை 3- ம் தேதி மின் தடை மின்வாரியம் அறிவிப்பு,
Next post அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் தங்க முயன்ற பெண்ணை யாரும் துன்புறுத்த வில்லை கோவை மருத்துவமனை டீன் விளக்கம்.