பாஜகவின் தந்திரங்கள் தான் சீமானின் பேச்சு ஆம்பூரில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் பேட்டி..

Spread the love
பாஜகவின் தந்திரங்கள் தான் சீமானின் பேச்சு ஆம்பூரில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் பேட்டி..
திருப்பத்தூர் மாவட்டம்..
ஆம்பூர் புறவழிச்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடமேற்கு மாவட்ட செயலாளராக ஓம்பிராகஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சி அலுவலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நவாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது..
இந்தியாவில் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் வகுப்பு மோதல்கள் கலவரங்கள், வன்முறைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன,
அவற்றை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு,
நிர்வாகத்தை முழுவதுமாக சீர்குலைத்து அதற்கு பொருட்பேற்க முடியாது என்று வெளிப்படையாக அவர்கள் வெறியாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் விவாத்திற்கு கூட தயாராக இல்லாத அரசாக பாஜக அரசு உள்ளது..
 பிரதமர் இது குறித்து பேசமாட்டார் நாடாளுமன்றத்திற்கு வரவேமாட்டார் என்ற நிலை இருக்கிறது..
 நாடாளுமன்ற சபாநாயகரை நாடாளுமன்றத்திற்கு வரச்சொல்லி எம்பிகள் போராட வேண்டிய அவலம் இருக்கிறது..  புதிய நாடாளுமன்றம் கட்டி அப்படியே இருக்கின்றது.. இவர்கள் நாடாளுமன்றத்தை அலங்கார பொம்மையாக வைத்திருக்கிறார்களே தவிர அதை ஜனநாயக அவையாக இல்லை என்பதை பாஜகவின் நடவடிக்கைகள் வெளிகாட்டுகின்றன.. இந்தியா முழுவதும் பாஜகவினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்,
குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியல் மிக மூர்க்கமாக முன்நிறுத்தப்படுகிறது..  பாஜகவை எதிர்த்து பேச வேண்டிய சீமான் அவர்கள் தமிழ்நாட்டில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடத்துக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் கூட காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்த்து பேசிக்கொண்டிருக்கின்றார்.. காங்கிரஸிற்க்கும் திமுகவிற்கும் சிறுபான்மையினர் வாக்களித்து பாவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுகிறார்கள்  அப்படி என்றால் சென்னையில் முன்னேறிய வகுப்பினர் வாழக்கூடிய அடத்தியான பகுதியில் இருந்து பாஜகவிற்கு ஒரு  வார்டு உறுப்பினர் கிடைத்திருக்கிறார், குறிப்பாக உயர்சாதியினரின் வாக்குகள் 3 சதவிகிதம் பாஜகவிற்கு செல்கிறது இதுபோன்ற சமூக சமூகத்தின் வாக்குகள் அவர்களுக்கு செல்கிறது அதைபற்றி எல்லாம் சீமான் பேசமாட்டார்..
சிறுபான்மையினருடைய வாக்குகள் பாஜகவிற்கு போவதில்லை  எனவே அந்த வாக்குகள் பெறவும் முடியாது பாஜகவே அந்த வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்லக்கூடிய சூழலில் அந்த வாக்குகளை வாங்கி மற்ற கட்சிகள் வென்று விட கூடாது எனவே அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை பாஜக இன்னொரு வகையில் கணக்கு போடுகிறது.. அதற்கு வலுசேர்க்கும் வகையில் சீமானின் பேச்சு அமைந்திருக்கிறது..  பாஜக சிறுபான்மையினர் வாக்கு வேறு கட்சிகளுக்கு போகக்கூடாது என தந்திரம் செய்கிறது..
அந்த தந்திரங்களின் ஒன்றுதான் சீமானின் பேச்சு அமைந்திருக்கின்றது என பேசினார்.. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் பங்கேற்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விருதுநகர் தனியார் கல்லூரியில் நடந்தது
Next post மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து கோவை எட்டிபடை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்‌