தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து கால்களால் மிதித்து விசிக,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Spread the love

தினமலர் நாளிதழ்க்கு பாடைகட்டி ஊர்வலம்

தாராபுரம் செப் 4,

தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து கால்களால் மிதித்து விசிக,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு சேலம் பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில், ‘காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ எனும் தலைப்பில் செய்தி வெளியானது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர்மின்னல் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் சாலை காமராஜபுரம் பகுதியில் ஈரோடு சேலம் தினமலர் பதிப்பிற்கு பாடை கட்டி அதில் பேப்பர் கட்டுகளை அடுக்கி வைத்து அதற்கு மாலை போட்டு நான்கு பேர் சுமந்தபடி வடதரை மற்றும் காமராஜபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக காமராஜபுரம் சுடுகாட்டிற்கு வந்தனர். சுடுகாட்டில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் பேப்பர்களை வைத்து அதனை அடக்கம் செய்து சமாதி இட்டனர். அதன் பிறகு சமாதிக்கு மாலையிட்டு அதனை காலால் மிதித்து நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாளிதழை சுமந்து வந்த பாடையை எரித்து எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விசிக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர்மின்னல் தலைமையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதி செயலாளர்  ஜான்நாக்ஸ்,வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார்,மாவட்ட மகளிர் அணி பரமேஸ்வரி, லீலாவதி மகேஸ்வரி, குண்டடம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குண்டடம் வடக்கு ஒன்றியம் இஷாக் . காங்கேயம், ஒன்றிய செயலாளர் விஸ்வகுமார், தாராபுரம் நகர பொறுப்பாளர் அருண்சாரதி, காட்டபன், வளவன்வினோத், கார்த்திக், சசிகுமார் ,பிரகாஷ், கொடியரசு, அலங்கியம், கிருஷ்ணமூர்த்தி, விஷால் வளவன் திராவிட கழக சண்முகம், ராஜேந்திரன், அலங்கியம், அஜித் தேவி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடந்தது
Next post பழனியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஏ பி ஏ மகளிர் கல்லூரி முதலிடம் பிடித்த அசத்தல்