திமுக அரசு மத்திய அரசுக்கு துணை போகின்றது? ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி குற்றச்சாட்டு 

Spread the love

திமுக அரசு மத்திய அரசுக்கு துணை போகின்றது? ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி குற்றச்சாட்டு

 

கோவை ஆக் 12,

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக மத்திய அரசு தொடர்ந்து கலவரத்தை தூண்டி வருவதாக, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி குற்றச்சாட்டு.

 

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக, அதன் ஊடகபிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும், ஊடகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் அரங்கில் நடைபெற்றது.

 

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய,மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,

 

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு துணை போகின்றதோ என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.ஆனால் மத்திய அரசு, மணிப்பூர் கலவரம் ஹரியாணாவில் கலவரம் என பல்வேறு கலவரங்களை 2024 தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தி வருகின்றது. இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை உருவாக்கி அதற்கு இந்தியா என பெயர் வைத்ததால் பாஜகவினர் மிகவும் கவலைபட்டு கொண்டு உள்ளனர்.மேலும் இந்தியா என கூட்டணி வைத்துள்ள இந்த அமைப்பை பலபடுத்த வேண்டும் என்றார்.

 

இந்தநிகழ்வில், மாநில துணை தலைவர் ரபி, மாவட்ட தலைவர் பெரோஸ்கான் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மாநில தொழிற்சங்க ஆலோசகர் முகமது ஆரிப், மற்றும் அசாருதின், செய்யாறு அப்பாஸ், தமிழா தமிழா பாண்டியன், மற்றும் கோவை மாவட்ட பொருப்பாளர் முகமது ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து

கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post மைண்ட்டாக்ஸ் டெக்னோ இன்டியா இரண்டாவது கிளை கோவையில் துவக்கம்
Next post “உத்யோக் உத்சவ் 2023” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்