ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் பேட்டி.

Spread the love

 

 

ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் பேட்டி.

 

நாட்டில் போலி தங்க நகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு இந்திய தர நிர்ணய அமைப்பு சில விதிகளை அறிவித்துள்ளது.

அதில் BIS ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின் தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்து கொண்ட HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது.

 

இதைத்தொடர்ந்து இந்த விதிகள் நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நகை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

 

இதில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆராய்ச்சியாளர் கவின் பேசும்போது…

 

ஹால்மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இனிமேல் எந்த நகை விற்பனையாளரும் HUID மார்க் இல்லாமல் விற்பனை செய்ய கூடாது.

வாங்குபவர்களின் தரத்திற்காக இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

நுகர்வோர் Huid இல்லாத நகைகளை வாங்காதீர்கள்.

மேலும் நகைகளின் நம்பகத்தன்மை குறித்து

Bis care

ஆப்பில் huid number பதிவு செய்தால் ஆய்வகத் தகவல் உட்பட அனைத்தும் வந்துவிடும்.

விதிகளுக்கு உட்படாத நகைகள் குறித்து Bis website மொபைல் ஆப்பில் புகார் கொடுக்கலாம்.

அதே போல் இனிமேல் ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

பேட்டி :-

கவின்,

BIS ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சிஆர்எஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக ராக் அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா மற்றும் சிஆர்எஸ் விருது விழா இன்று நடைபெறுகிறது
Next post ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.