ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

Spread the love

ஜோலார் பேட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

திருப்பத்தூர் மே 26,

தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி பல்துறை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு விழா ஜோலார்பேட்டை நந்தினி மஹாலில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்த விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி முன்னிலை வகிக்க தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்துறை பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கியும், ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில்

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை,

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார்,

ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி:-

மாவட்ட நிருபர் கே.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் பேட்டி.
Next post புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு