மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி நன்றி

Spread the love

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் அதிகரித்து வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ஹென்றி பேட்டி

 

 

 

 

 

 

கோவை விமான நிலையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றி  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் தங்களின் பட்டா மனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கும் வகையில், மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் பகுதியில் (HACA) அமைந்துள்ள பட்டா மனைகளையும் வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்யக் கோரியும், பதிவுத்துறையில் பொது அதிகார கட்டணம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு கட்டண உயர்வு, கட்டுனர்களால் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது முதலில் வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மனையை மாத்திரம் பதிவு செய்யும் வகையில் வழிவகை இருந்தது. தற்பொழுது இதனை மாற்றியமைத்து கட்டாயம் மனை மற்றும் கட்டிடத்துடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு,போலி ஆவணம் ரத்து சட்டம் சட்டப்பிரிவு 77A விற்கு தற்பொழுது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடை. சொத்தின் மீதான வழிகாட்டி மதிப்பு முரண்பாடு உள்ள பகுதிகளில் குறைவு முத்திரைத் தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் பதிவு செய்ய மறுப்பு,பதிவு அலுவலகங்களில் பதிவு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள்.நாடு முழுவதும் வழிகாட்டி மதிப்பு பன்மடங்கு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களை சந்தித்து விளக்கமாக பேசினார் அப்போது தேசிய துணை செயலாளர் லயன் ச.செந்தில்குமார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தேசிய ஒருங்கிணைப்பாளர் தமிழரசன்,தேசிய செயற்குழு உறுப்பினர் வில்சன் தாமஸ்,பாலசுப்ரமணியன்,வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார்,ஜெயம் கண்ணன்,மெடிக்கல் நாராயணன், தியாகராஜன்,செல்வகுமார், மோகன்ராஜ், பால்ராஜ், மணிகண்டன், கிரிதரன் ,ராஜேஷ்,ஐயப்பன், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில், இஸ்ரோ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது…
Next post நாட்டுக்கோழியில் கிடைக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பிராய்லர் கோழியில் கிடைக்கின்றது – கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேட்டி