500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான்

Spread the love

500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கிய கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான்

கோவை ஜன 17,
கோவை வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமையில் பொங்கல் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இதன் ஒருபகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி, வழியாம் பாளையம்,கோயில்பளையம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தனது சொந்த நிதியில் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கியதுடன்,கழக அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு எடுத்து கூறி வருகின்றார் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான். அதுமட்டுமின்றி கோவை மாநகராட்சி 5 வது வார்டு வழியாம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கவுன்சிலர் நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Next post அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் -அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சதா நாடார் பேட்டி