சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு கோவையில் இன்று துவங்கியது

Spread the love

கோவை நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா!

கோவை, டிச22,

சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு டிச. 22,23 & 24 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்‌ஷ்மிகாந்த் கூறுகையில், ரஷ் ரிபப்ளிக் சார்பில் ஏற்பாடு செய்துள்ள, சான்டாஸ் சோஷியலின் ஆறாவது பதிப்பு 2023 டிசம்பர் 22,23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறுகிறது. சான்டாஸ் சோஷியல் என்பது கோவை நகரின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். வாரயிறுதி நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங்,உணவு, பொழுதுபோக்கு என அனைத்தும் ஒரே இடத்தில் காணலாம்.

உணவுப் பிரியர்களுக்கு, பலவகையான உணவு வகைகள் , பிரியாணி முதல் சுஷி வரை, நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் குழந்தைகளிடையே விருப்பமுள்ள பார்பிக்யூக்கள், ரோல்கள் மற்றும் கிறிஸ்துமஸ்-ஒய் கேக்குகள் மற்றும் குக்கீகள் என அனைத்தையும் இங்கு கிடைக்கும். மேலும் இங்கு உணவுகளை நீங்கள் வாங்கும் முன் அதனை சுவைத்து பார்த்து வாங்கிக்கொள்ளம்.

இரண்டு நாட்களும் KL1983 லைவ் பேண்ட் & பேண்ட் வயோ லைவ் பேண்ட் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த வார இறுதியில் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க இது சிறந்த இடமாக இருக்கும். கேளிக்கைகள் கலை மற்றும் கைவினைப் பட்டறைகள், நெயில் ஆர்ட் மற்றும் முக ஓவியம் மற்றும் விளையாட்டுகள் ஏராளமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடமாக எது இருக்கும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவை தி லிவிங் ரூம் உணவகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
Next post ஜெகதளா பேரூராட்சி மாதந்திர கூட்டம் மன்ற தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது