ஜெகதளா பேரூராட்சி மாதந்திர கூட்டம் மன்ற தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது

Spread the love

ஜெகதளா பேரூராட்சி மாதந்திர கூட்டம் மன்ற தலைவர் பங்கஜம் தலைமையில் நடந்தது

நீலகிரி டிச 24,
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.இதில் 9 திமுக கவுன்சிலர், காங்கிரஸ் கவுன்சிலர் 2 பேர்,அதிமுக கவுன்சிலர் 4 பேர் என மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பங்கஜமும் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர் துணை தலைவராகவும் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 12ம்தேதி 5 வது வார்டு உறுப்பினர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் பேரூராட்சி மன்ற மாதந்திர கூட்டம் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களிடம் பேரூராட்சி தலைவர் பங்கஜம் கூறியதாவது இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அவரவர்களுடைய வார்டு பகுதிகளின் அடிப்படை தேவைகளை குறித்து பேசினார்கள் என்றும் அதனை ஆய்வு செய்து உடனடியாக செய்து தரப்படும் என கூறியதாக தெரிவித்தார்.

இது குறித்து மன்ற உறுப்பினர்கள் கூறுகையில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் மாதந்திர கூட்டம் சிறப்பாகவும்,அமைதியாகவும் நடந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு கோவையில் இன்று துவங்கியது
Next post ஊட்டியில் களைகட்டும் பாரம்பரிய சாக்லேட் திருவிழா